ADDED : ஜன 18, 2024 05:04 AM

காட்டன்பேட்: பெங்களூரில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் கண்ணாடியை உடைத்த, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30 பயணியர் இருந்தனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பெங்களூரு சாந்தலா சிக்னலுக்கு பஸ் வந்தது.
அப்போது ஒரு ஆட்டோ, இரண்டு பைக்கில் வந்த 5 பேர், இரும்புக் கம்பிகளால் பஸ்சின் இடது பக்க ஜன்னல் கண்ணாடிகளையும், பின்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.
இதில் கண்ணாடி சுக்குநுாறாக நொறுங்கி விழுந்தது. அதிர்ச்சி அடைந்த பயணியர் அலறினர். பஸ்சை அங்கிருந்து டிரைவர் எடுத்து வந்து, சாட்டிலைட் பஸ் நிலையத்தில் விட்டார்.
இதுகுறித்து டிரைவர் அளித்த புகாரின்பேரில், இம்ரான், 25, ஆரீப், 24, ஆகியோரை காட்டன்பேட் போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடிவருகின்றனர். கண்ணாடியை உடைத்தது எதற்காக என்று, விசாரணை நடந்து வருகிறது.