தேர்தலை பற்றி தான் நினைப்பு முதல்வர் மீது குமாரசாமி பாய்ச்சல்
தேர்தலை பற்றி தான் நினைப்பு முதல்வர் மீது குமாரசாமி பாய்ச்சல்
ADDED : மார் 11, 2024 04:29 AM

பெங்களூரு, : 'தேர்தலை பற்றி மட்டும் தான் முதல்வர் சித்தராமையா நினைக்கிறார்' என்று, முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது, 'எக்ஸ்' பதிவு:
கர்நாடகாவில், வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
நிலைமை இப்படி இருக்கும் போது, காங்கிரஸ் அரசு வாக்குறுதி திட்ட மாநாடு என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறது.
தேர்தலை பற்றி மட்டும் தான் முதல்வர் சித்தராமையாவின் நினைப்பு உள்ளது.
அவசர தேவைக்காக, கலெக்டர்கள் தரப்பில் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தையும் அரசு வாங்கி உள்ளது.
மாநாடுகள், விளம்பரத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து உள்ளீர்கள். அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்.
ஒரு ஆண்டில் உங்கள் முழு அரசின் வாழ்க்கையும் விளம்பரம் என்றே உள்ளது.
வறட்சியில் மக்கள் கதறும் நிலையில், பிரசாரத்திற்காக பணம் வாரி இறைப்பதற்கு வெட்கமாக இல்லையா.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

