'அடுத்தவர் பிள்ளையை கிணற்றில் தள்ளி ஆழம் பார்ப்பார் குமாரசாமி'
'அடுத்தவர் பிள்ளையை கிணற்றில் தள்ளி ஆழம் பார்ப்பார் குமாரசாமி'
ADDED : பிப் 17, 2024 04:36 AM
பெங்களூரு : பெங்களூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமன இயக்குனராக பணியாற்றியவர் மஞ்சுநாத், நடப்பாண்டு ஜனவரி 31ல் ஓய்வு பெற்றார்.
இவரை அரசியலுக்கு இழுக்க, முயற்சி நடக்கிறது. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன்.
இவரை ம.ஜ.த.,வில் சேர்த்து, பெங்களூரு ரூரல் தொகுதியில், கூட்டணி வேட்பாளராக களமிறக்க ஆலோசனை நடக்கிறது.
இதுதொடர்பாக, மாகடி காங்., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறியதாவது:
முன்னாள் முதல்வர் குமாரசாமி, அடுத்தவரின் பிள்ளைகளை கிணற்றில் தள்ளி ஆழம் பார்க்கும் நபர். யுத்த களத்தில் முதுகை காண்பித்து ஓடும் பழக்கம் எங்களுக்கு இல்லை. எந்த பாளையக்காரர்கள் வந்தாலும், யுத்தம் செய்ய நாங்கள் தயார்.
டாக்டர் மஞ்சுநாத்துக்கு, மருத்துவ துறையில் கவுரவம் உள்ளது. ஆனால் அரசியல் வேறு என்பது, டாக்டருக்கு புரிய வேண்டும். அரசியலில் ஈடுபடுவது அவ்வளவு எளிதல்ல. டாக்டர் மஞ்சுநாத்தை பலிகடாவாக்க, ம.ஜ.த., தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
மஞ்சுநாத்தை களமிறக்கட்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்கு தயாராக துவங்கிவிட்டோம். பெங்களூரு ரூரலில் சுரேஷ் வெற்றி பெறுவது உறுதி. மஞ்சுநாத்துக்கு பதிலாக, குமாரசாமியே போட்டியிடட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.