பீன்யா ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவிலில் 20ல் கும்பாபிஷேகம்
பீன்யா ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவிலில் 20ல் கும்பாபிஷேகம்
ADDED : நவ 15, 2024 11:12 PM

பீன்யா: பீன்யா ஸ்ரீசிவசக்தி மாரியம்மன் கோவிலில் வரும் 20ம் தேதி இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
பெங்களூரு பீன்யா 3வது பேஸ், 4வது கிராஸ் கணபதி நகரில் ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டாவது மஹா கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி துவங்குகிறது.
முதல் நாளான வரும் 18ம் தேதி காலை 7:30 மணிக்கு கங்கா பூஜை, சுமங்கலி பூஜை; காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா மங்களாரத்தி நடக்கிறது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
அன்று மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத் சங்கரஹனா, அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தன், கும்ப அலங்காரம், கால ஆகர்ஷனே, முதல் யாகசாலை பூஜை ஹோமம். இரவு 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம்.
இரண்டாவது நாளான 19ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாவது கால யாகசாலை, தேவி மூல மந்திரம், சாந்தி ஹோமம்; மாலை 5:30 மணிக்கு மூன்றாவது கால யாகசாலை, லலிதா ஹோம பூஜை, சகஸ்ர நாம ஹோமம், குங்குமம் அலங்காரம்; இரவு 8:30 மணிக்கு மஹா மங்களாரத்தி, இரவு 9:00 மணிக்கு நவரத்தின பஞ்ச லோக ஸ்தாபனம் அஷ்ட பந்தன சமர்ப்பணம்.
மூன்றாம் நாளான 20ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு 4வது கால யாகசாலை, கலா ஹோமம், தத்வ ஹோமம், நாடி சந்தான பூர்வாக ஹோமம்; காலை 6:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 7:10 மணிக்கு கலச ஊர்வலம், விமான கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம்.
விழா ஏற்பாடுகளை செய்துள்ள ஸ்ரீசிவசக்தி மாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தேவி உபாசகர் சரவணா சுவாமிகள், பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.