ADDED : பிப் 10, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு:
கும்பமேளா இன்று துவக்கம்: கூடுதல் போலீசார் நியமனம்
பிரயாக்ராஜ் போன்று, மைசூரின் டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடக்கவுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவை காண, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவர்.
நான்கு கூடுதல் எஸ்.பி.,க்கள், 10 டெபுடி எஸ்.பி.க்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 80 எஸ்.ஐ.,க்கள், 70 ஏ.எஸ்.ஐ.,க்கள், 600 தலைமை ஏட்டுகள், 600 ஏட்டுகள், 500 ஊர்க்காவல் படையினர் உட்பட, 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

