sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

/

டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

19


ADDED : பிப் 16, 2025 10:31 AM

Google News

ADDED : பிப் 16, 2025 10:31 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'கும்பமேளாவை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவித்ததால் அதிகம் பேர் கூடியதும், திடீரென அதிகளவில் ரயில் டிக்கெட் விற்றதுமே கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்கலாம்' என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கூறப்பட்டு உள்ளதாக ஆங்கில மீடியாவில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரயாக்ராஜ் நகருக்கு செல்ல ஒவ்வொரு மணி நேரமும் 1,500 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.நேற்றைய தினம் இரவு ரயில் நிலையத்தின் 14வது நடைபாதையில் ஏராளமான பயணிகள் கூடியிருந்தனர்.

அதேநேரத்தில் டில்லியில் இருந்து தர்பங்கா செல்லும் ரயிலுக்காக 13வது நடைபாதையிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த ரயில் தாமதமாக வந்தது. இதன் காரணமாக நள்ளிரவு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த நடைபாதையில் நின்றவர்கள் 14வது நடைபாதைக்கு வந்தனர். இதனால், அங்கு நிற்கக்கூட இடமில்லாமல் காணப்பட்டது.

ரயில் நிலையத்தில் இருந்த கூட்டம் மற்றும் தொடர்ச்சியான டிக்கெட் விற்பனை காரணமாக, இரவு 10 மணியளவில், சிறப்பு ரயிலை அறிவித்த அதிகாரிகள், அது 16வது நடைமேடையில் இருந்து கிளம்பும் அறிவித்தனர்.

இதனையடுத்து, 14வது நடைபாதையில் இருந்து, 16வது நடைபாதைக்கு வேகமாகச் சென்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். கூடுதலாக ரயில்பே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us