தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காகித உருளை விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

காகித உருளை விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

காகித உருளை விழுந்து தொழிலாளி உயிரிழப்பு


UPDATED : அக் 28, 2026 03:17 PM

ADDED : அக் 28, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 03:17 PM ADDED : அக் 28, 2026 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த போது, காகித உருளை உருண்டு விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

டில்லி, சிங்கோலாவில் உள்ள காகித தொழிற்சாலையில், லாரியில் காகித உருளைகளை ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. சிங்கோலாவை சேர்ந்த நீரஜ்,27 என்பவர் உள்ளிட்ட தொழிலாளர்கள், காகித உருளைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, லாரியில் ஏற்றப்பட்ட காகித உருளைகளில் ஒன்று, திடீரென உருண்டு லாரியின் கீழ் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

அதில், நீரஜ் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், நீரஜ் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், நீரஜ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us