கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது சரியல்ல: சந்திர சூட் பேட்டி
கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது சரியல்ல: சந்திர சூட் பேட்டி
UPDATED : ஜன 01, 2024 08:16 PM
ADDED : ஜன 01, 2024 08:13 PM

புதுடில்லி: கொலிஜியம் முறையிலான நீதிபதிகள் நியமனத்தில்
வெளிப்படைத்தன்மை இல்லை என கூறுவது சரியல்ல, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்
தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
நியமனத்தில், 'கொலிஜியம்' முறை, பின்பற்றப்பட்டு
அதனடிப்படையில்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள்
அடங்கிய குழு, நீதிபதிகள் நியமனங்களை மேற்கொண்டு வரும் நடைமுறை
பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி,
கொலிஜியம்
அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறுவது சரியல்ல. உயர்நீதிமன்ற,
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், ஒரு நீதிபதியை நியமிக்கும்
முன் தகுந்த ஆலோசனை பெற்று சரியான செயல்முறையை பின்பற்றி. அதில் அதிக
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டு, அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்றார்.