sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

/

வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

6


UPDATED : ஜன 09, 2026 05:38 PM

ADDED : ஜன 09, 2026 05:10 PM

Google News

UPDATED : ஜன 09, 2026 05:38 PM ADDED : ஜன 09, 2026 05:10 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004 - 09 வரை, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்கு டில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட 11 பேர் மீது, கடந்த அக்., 13ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றமும் ஏற்றது.இந்த வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில் இன்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீதான அடுத்த விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் லாலுவின் குடும்பத்தினர் மீதான இந்த ஊழல் வழக்கு விசாரணை தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us