காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்
ADDED : ஜூலை 25, 2025 07:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூஞ்ச்: காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, கண்ணி வெடி வெடித்தில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் இச்சம்பவம் நடந்தது. காயம் அடைந்த வீரர் ஒருவர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் ராணுவம் தெரிவித்துள்ளது. வீரமரணம் அடைந்த வீரர் லலித்குமார் என தெரியவந்துள்ளது.