தண்டவாளத்தின் அருகே மண்சரிவு; ரயில்களின் வேகம் குறைப்பு
தண்டவாளத்தின் அருகே மண்சரிவு; ரயில்களின் வேகம் குறைப்பு
ADDED : அக் 23, 2024 08:55 PM

பெலகாவி : குடச்சியில் தண்டவாளத்தின் அருகே ஏற்பட்ட மண்சரிவால், ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுகின்றன.
பெலகாவியின் ராய்பாக் குடச்சி டவுனில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், குடச்சி ரயில் நிலையத்தில் இருந்து, சிறிது துாரத்தில் தண்டவாளத்தின் அருகே மண்சரிந்தது.
இதனால் நேற்று காலையில் மண்சரிந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் ரயில்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்கத்து தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதுவும் மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மண்சரிந்த இடத்தை மீரஜ் ரயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். குடச்சி வழியாக மஹாராஷ்டிரா செல்லும் ரயில்கள், இந்த பாதையில் தான் இயக்கப்படுகின்றன. சரிந்த மண் விரைவில் அகற்றப்படும்.
இரட்டை பாதையில் தற்போது ஒரு வழி பாதையில், ரயில்கள் செல்கின்றன என, அதிகாரிகள் கூறினர்.

