ஆந்திராவில் லேசர் காட்சி: கின்னஸ் சாதனை படைத்த 5 ட்ரோன்கள்!
ஆந்திராவில் லேசர் காட்சி: கின்னஸ் சாதனை படைத்த 5 ட்ரோன்கள்!
ADDED : அக் 23, 2024 06:45 PM

அமராவதி: ஆந்திராவில், ட்ரோன்கள் கண்காட்சி நடந்தது. இதில் 5,500 ட்ரோன்கள், வானத்தை ஒளிரச்செய்தன. அதில் ஐந்து கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டன.
ஆந்திராவில் ஆயிரக்கணக்கான டிரோன்கள் பறந்து தேசியக் கொடி, புத்தர், விமானம், ஆளில்லா விமானம் என பல்வேறு வடிவங்களை உருவாக்கியது.
அமராவதி ட்ரோன் உச்சி மாநாடு -2024 இன் ஒரு பகுதியாக, கிருஷ்ணா நதிக்கரை புன்னமி காட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மிகப்பெரிய கோள் உருவாக்கம், மிகப்பெரிய மைல்கல் உருவாக்கம், மிகப்பெரிய விமானம் உருவாக்கம், மிகப்பெரிய கொடி காட்சி மற்றும் வான்வழி லோகோ டிஸ்ப்ளே ஆகிய பிரிவுகளின் கீழ் மிகப்பெரிய ட்ரோன் நிகழ்ச்சி என ஐந்து கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
இந்த கண்காட்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கலந்து கொண்டு, பார்வையிட்டு, அமைப்பாளர்கள் மற்றும் பங்குபெற்றவர்களை வாழ்த்தினார்.
சந்திரபாபு நாயுடு கூறுகையில், 'நாம் உருவாக்கும் புதிய அமராவதி நகரம் இந்தியாவின் ட்ரோன் தலைநகராகவும், மாநிலத்திற்கும் புத்தாக்க மையமாகவும் திகழும். அமராவதியில் ட்ரோன் தொழிற்சாலை அமைப்பதற்கு கர்னுால் மாவட்டம் ஓர்வாகல்லுவில் 300 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
35 ஆயிரம் ட்ரோன் பைலட்டுகள் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். ட்ரோன்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் சாதகமான சுற்றுச்சூழல் நிலையை ஏற்படுத்த 15 நாட்களில், அரசு புதிய கொள்கைகள் வகுக்கும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

