மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் சதித்திட்டம் லஷ்கர் பயங்கரவாதி மிரட்டல்
மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் சதித்திட்டம் லஷ்கர் பயங்கரவாதி மிரட்டல்
ADDED : பிப் 25, 2026 12:56 AM

புதுடில்லி: மும்பை தாக்குதல் பாணியில், மீண்டும் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தப் போவதாக லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு நம் நாட்டிற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், குஜராத் முதல் கேரளா வரையிலான அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்., 22ம் தேதி புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கையை எடுத்தது. அதிதீவிரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள், உள்கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை தலைவரான சைபுல்லா கசூரி, '2008 நவ., 26ல் கடல் வழியாக ஊடுருவி, மும்பையில் தாக்குதல் நடத்தியது போல, 2026லும் கடலில் ஆதிக்கம் செலுத்துவோம்' என, நம் நாட்டிற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சைபுல்லா கசூரி வெளியிட்ட வீடியோவில், 'கடந்த 2025ல் வான்வெளியில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. அதே போல, 2026ல் கடல் வழியாக நாம் ஆதிக்கம் செலுத்துவோம். நிலம், வானம், கடல் என எதிரிகளை அனைத்து வகையிலும் தாக்குவோம்.
'இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில், பாகிஸ்தான் வசம் அனைத்து கட்டுப்பாடுகளும் வந்து விடும். பாகிஸ்தானுக்கான நீரை நிறுத்தி, இந்தியா நீர்
தொடர்ச்சி 5ம் பக்கம்

