லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனம் மீது போலீசில் புகார்
லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனம் மீது போலீசில் புகார்
UPDATED : செப் 26, 2024 05:10 PM
ADDED : செப் 26, 2024 03:00 AM

அமரவாதி: திருப்பதி லட்டு பிரசாத்திற்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டு நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு திண்டுக்கல் ஏ.ஆர்., டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருந்ததாக ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி ஜெ. சியமளா ராவ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், லட்டு பிரசாதம் தயாரிக்க திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடமிருந்து கடந்த ஜூன் -ஜூலை மாத இடையில் கொள்முதல் செய்யப்பட்ட நெய் மாதிரி ஆய்வுக்குப் உட்படுத்தப்பட்டதில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளது உறுதியாகியுள்ளதால், அந்நிறுவனம் மீது திருப்பதி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

