பீஹாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நிதீஷ்குமாரை சாடிய ஓவைசி
பீஹாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நிதீஷ்குமாரை சாடிய ஓவைசி
ADDED : பிப் 13, 2024 04:19 PM

ஹைதராபாத்: பீஹாரில் நிதீஷ் குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பதாவது: விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவது பா.ஜ., அரசின் தோல்வியை காட்டுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும். விவசாயிகள் போராட வரும் போது, அண்டை நாட்டில் இருந்து ராணுவம் வருவது போல் தடுக்கிறார்கள். தேர்தல் நெருங்குகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.
பீஹாரில் இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். நிதீஷ் குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவுகிறது. துரதிர்ஷ்டவசமாக இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.