ADDED : செப் 26, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிபூர்: அடையாளம் தெரியாத வானம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.
கர்கார்டூமா நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தவர் மித்லேஷ் சவுபே, 40. இவர் நேற்று முன் தினம் இரவு தன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
கிழக்கு டில்லியின் காசிபூர் பகுதியில் அவர் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம், நிற்காமல் சென்றுவிட்டது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.