சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்
UPDATED : அக் 08, 2025 03:27 AM
ADDED : அக் 08, 2025 03:25 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், அந்த செயலுக்காக வருந்தவில்லை என்றும், இதற்காக தலைமை நீதிபதியிடம் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் கூடியது.
சஸ்பெண்ட் அப்போது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார்.
அதற்குள் உஷாரடைந்த நீதி மன்ற காவலர்கள், உடனடியாக பாய்ந்து சென்று வழக்கறிஞரை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர் வீச முயன்ற காலணி தலைமை நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது.
உச்ச நீதிமன்ற அறையில் நிகழ்ந்த இந்த இடையூறுகளை பொருட்படுத்தாத தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'இது போன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. விசாரணையை தொடருங்கள்' என, கூறி, நீதிமன்ற பணியில் மூழ்கினார்.
கா லணியை வீசிய உடனே, கிஷோரை கைது செய்த காவலர்கள், அவரை வெளியே அழைத்து சென்று விசாரித்தனர்.
ஆனால், தலைமை நீதிபதி, 'அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதனால், கிஷோரை காவலர்கள் விடுவித்தனர். எனினும், இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதி மீது காலணி வீசியது குறித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நேற்று கூறியதாவது:
தலைமை நீதிபதி மீது காலணி வீசியது நானல்ல; கடவுள் தான் அதை செய்தார். இது கடவுளின் கட்டளை, ஒரு செயலுக்கான எதிர்வினை. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சனாதன தர்மத்தை அவமதித்து விட்டார். இதன் காரணமாகவே அவர் மீது காலணியை வீசினேன்.
நடவடிக்கை இதற்காக நான் வருந்தவில்லை. அவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதும் இல்லை. இந்திய பார் கவுன்சில் அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது.
இந்த விவகாரம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பரிந்துரைக்காமலேயே, என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. என்னிடமும் இது பற்றி பார் கவுன்சில் விளக்கம் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னணி மத் திய பிரதேசத்தின் கஜூராஹோவில் 7 அடி உயர முள்ள விஷ்ணு சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை விசாரிக்க தலை மை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுத்துவிட்டார். அத்துடன், ''எதையாவது செய்யும்படி அந்த கடவுளிடமே சென்று கேளுங்கள்,'' என கருத்து கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இந்த கருத்து, ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து, தன் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன் என்றும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்திருந்தார்.