ADDED : ஜூன் 16, 2025 11:51 PM

தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளால், பேரிடர் மேலாண்மை துறையில் நம் நாடு உலகளவில் முன்னணியில் உள்ளது. பேரிடர் மீட்பு பணிகளில், இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை எட்டும் இலக்குடன் இந்த அமைப்புகள் செயலாற்றி வருகின்றன.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
அழிக்கும் முயற்சி!
ஏழைகளுக்கான 100 நாள் வேலை உறுதித்திட்டத்தை மத்திய அரசு அழிக்க முயற்சிக்கிறது; இந்தத் திட்டத்தை செயல்படுத்த, முதல் ஆறு மாதங்களுக்கு 60 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் பைகளில் இருந்து 25,000 கோடி ரூபாயை பறிக்க பார்க்கிறது. இது, நம் அரசியலமைப்புக்கு எதிரான குற்றச்செயல்.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்கிரஸ்
ஒதுங்குங்கள் நாயுடு!
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக ஒன்பது ஆண்டுகளும், ஆந்திராவின் முதல்வராக ஐந்து ஆண்டுகளையும் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்ய உள்ளார். இனியாவது தன் பதவியை அவரது மகன் நாரா லோகேஷுக்கு அவர் அளிக்க வேண்டும். இல்லை எனில், லோகேஷின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அசாதுதீன் ஓவைசி
தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

