ADDED : ஜன 12, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ:உ.பி., அரசின் கலால் துறை கூடுதல் கமிஷனர், ஞானேஸ்வர் திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவு:
அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், 22ம் தேதி நடக்கிறது. இந்த நிகழ்வை 'தேசிய விழா'வாக உ.பி., அரசு கொண்டாடுகிறது.
எனவே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்படி மாநிலம் முழுதும் அனைத்து மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றை, 22ம் தேதி திறக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவு, அனைத்து கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கும்பாபிஷேக நாளான, 22ம் தேதி மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி கும்பாபிஷேக விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஆதித்யநாத் மற்றும் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.