தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி


ADDED : ஜன 06, 2025 02:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 02:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வுக்கருவியில், முளைத்துள்ள காராமணி (தட்டைப்பயிறு) செடிகளில் இலைகள் துளிர்த்துள்ளன.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச., 30ம் தேதி விண்ணில் பாய்ந்தது. தற்போது பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.

இதில், பி.ஓ.இ.எம்., 4 எனப்படும் சுற்றுவட்டப் பாதை பரிசோதனை அமைப்பில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன. சில தினங்களுக்கு முன், அவை முளைத்து துளிர் விடும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.,06) விண்வெளியில் காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ கூறியிருப்பதாவது: பி.எஸ்.எல்.வி.,- சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்தது. காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us