ADDED : பிப் 15, 2024 05:34 AM
l சட்ட மேலவையில் நேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் வரவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன.
l பா.ஜ., உறுப்பினர் ஹேமலதா நாயக் கேள்விக்கு, பதிலளிக்க வேண்டிய அமைச்சர் போசராஜ், அருகில் இருந்து உள்துறை அமைச்சரிடம் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தார். சபாநாயகர் பசவராஜ் ஹொரட்டி பலமுறை கூறியும், சபை ஊழியர் சென்று அவரிடம் தெரிவித்தபோது தான் திரும்பினார். இதனால் அங்கிருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.
l பா.ஜ., நியமன உறுப்பினர் தல்வர் சபனா, பல்கலைக்கழகங்களில் பசவண்ணர், சுவாமி விவேகானந்தர் உட்பட பிரபலமான 15 பேரின் ஆய்வு இருக்கைகள் அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அங்கு இல்லாததால், அமைச்சர் போசராஜு விளக்கம் அளிக்க எழுந்தார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த ஆளும் கட்சியினர், கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் பதில் அளித்தால் தான் சரியாக இருக்கும் என்றனர். சபாநாயகர் பசவராஜ் ஹொரட்டியும், -இன்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
l ஆளும் கட்சி உறுப்பினர் நாகராஜ், வேகமாக பேசிக் கொண்டே இருந்தார். இதனால் குறுக்கிட்ட மேலவை துணைத் தலைவர் பிரானேஷ், மெதுவாக பேசுங்கள். அப்போது தான் உங்களின் பேச்சுகளை குறிப்பெடுக்க முடியும். வேகமாக பேசினால் எப்படி குறிப்பெடுப்பது. மெதுவாக பேசுங்கள்' என்றார். இதை கேட்டு அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
l முன் இருக்கையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத், திடீரென எழுந்து பின் இருக்கையில் அமர்ந்து, தனது மொபைல் போனை எடுத்து பார்த்து கொண்டிருந்தார்.

