சிகிச்சையில் சிறுத்தை மரணம்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை
சிகிச்சையில் சிறுத்தை மரணம்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை
ADDED : ஏப் 29, 2025 05:09 PM

பானாஜி: கோவா மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை மரணம் அடைந்த நிலையில், கவனக்குறைவாக இருந்ததாக கூறி, வனத்துறை அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வனத்துறை அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவாவில் பொண்ட்லா மிருகக்காட்சி சாலை உள்ளது. தெற்கு கோவாவில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்தபோது சிக்கிய சிறுத்தை, சிகிச்சைக்காகக் பொண்ட்லா மிருகக்காட்சிக்கு கொண்டுவரப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த சிறுத்தை இன்று அதிகாலை இறந்தது.
இது குறித்து பனாஜியில் வனத்துறை அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் கூறியதாவது:
வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போண்ட்லா மிருகக்காட்சிசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை இறந்துவிட்டது. சிறுத்தை இறப்புக்கு காரணம், துணை வனப்பதுகாவலராக உள்ள நவீன் குமார் தான் காரணம். அவர், தன் கடமையை சரிவர செய்யாததுதான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு காரணம்.வனவிலங்குகளைப் பாதுகாப்பது மாநில அரசின் முன்னுரிமையாக உள்ளது என்றும், இந்தப் பணிக்காக அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நவின் குமார் போன்ற ஒரு அதிகாரி களத்தில் இறங்கி தனது கடமையைச் செய்ய வேண்டியிருப்பது வெட்கக்கேடானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசிடம் கேட்டு கொண்டுள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் கூறினார்.

