"உங்கள் ஓட்டு தெளிவாக ஒலிக்கட்டும்" - பிரதமர் மோடி
"உங்கள் ஓட்டு தெளிவாக ஒலிக்கட்டும்" - பிரதமர் மோடி
UPDATED : மே 13, 2024 09:37 AM
ADDED : மே 13, 2024 09:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இன்று (மே 13) காலை முதல் துவங்கி நடந்து வரும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி தெலுங்கு, ஒடிசா, ஹிந்தி, மராத்தி, வங்காளம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் சமூகவலைதளத்தில் ஓட்டளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் திருவிழா தேர்தல், ஆகையால் அனைவரும் தவறாமல் பெருவாரியாக ஓட்டளிக்க வேண்டும். இளைஞர்கள், பெண்கள், முதல் வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் ஓட்டு உங்கள் குரல் , இது ஓங்கி ஒலிக்கும்படியாக இருக்கும், இது தெளிவாக ஒலிக்கும் வகையில் இருக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.