ஊழல் காங்., அரசை அகற்றுவோம்! 'மாஜி' பிரதமர் தேவகவுடா சபதம்
ஊழல் காங்., அரசை அகற்றுவோம்! 'மாஜி' பிரதமர் தேவகவுடா சபதம்
ADDED : நவ 12, 2024 07:43 PM

ராம்நகர் ; ''ஊழல் செய்யும் காங்கிரஸ் அரசை நானும், எடியூரப்பாவும் சேர்ந்து அகற்றுவோம்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
ராம்நகரின் சென்னப்பட்டணாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியதாவது:
ஹாசன் பாலியல் வழக்கை பயன்படுத்தி, எங்கள் குடும்பத்தை அரசியல் ரீதியாக முடிக்க சிலர் திட்டமிட்டனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் சென்னப்பட்டணாவில் நிகிலை வெற்றி பெற வைப்பதன் மூலம், துணை முதல்வர் சிவகுமாரின் ஆணவத்தை உடைக்க வேண்டும்.
ஜனவரிக்குள் காங்கிரஸ் அரசு கவிழும் என, மத்திய இணை அமைச்சர் சோமண்ணா கூறி உள்ளார். என்னை போலவே, அவருக்கும் ஜோதிடம் பார்க்கும் வழக்கம் உள்ளது. இதனால் அவர் உண்மையை கூறி உள்ளார்.
ஒரு முறை எடியூரப்பாவுக்கும், எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் ஊழல் செய்யும் காங்கிரஸ் அரசை நாங்கள் இருவரும் சேர்ந்து அகற்றுவோம்.
காங்கிரஸ்காரர்கள் எப்போதும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தது இல்லை.
காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று, குமாரசாமியிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. குமாரசாமி முதல்வராக இருந்தபோது, அவரை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

