ADDED : செப் 23, 2024 12:50 AM

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. இது தொடர்பான அறிக்கையை முழுமையாக படித்து ஆய்வு செய்த பின்பே, அதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து முடிவு செய்வோம்.
நவீன் பட்நாயக், ஒடிசா முன்னாள் முதல்வர், பிஜு ஜனதா தளம்
இருட்டு அறையான பார்லிமென்ட்!
மத்தியில் புதிய அரசு பதவியேற்று, 100 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பார்லிமென்ட் நிலைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் அரசு தாமதம் செய்கிறது. பார்லிமென்ட், இருட்டு அறையாக மாறிவிட்டது.
டெரக் ஓ பிரையன், எம்.பி., திரிணமுல் காங்கிரஸ்
பாகிஸ்தான் ஏஜென்ட்!
ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும், பாகிஸ்தானின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர். பாகிஸ்தான் தரப்பினர் எதை விரும்புகின்றனரோ, அதை நிறைவேற்ற இவர்கள் துடிக்கின்றனர்.
நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,