sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்: தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் காங்கிரஸ்

/

சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்: தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் காங்கிரஸ்

சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்: தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் காங்கிரஸ்

சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்: தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் காங்கிரஸ்

28


ADDED : நவ 01, 2024 06:15 PM

Google News

ADDED : நவ 01, 2024 06:15 PM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேர்தல் ஆணையம் தங்களது தலைவர்களை விமர்சனம் செய்வதாகவும், இது தொடர்ந்தால், அந்த அமைப்பிற்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தன. பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் நொந்து போன காங்கிரஸ் தலைவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.

இதை விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கு ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், தன் கடுமையான கண்டனத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. ஆணையம் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் நடந்த குறிப்பிட்ட 5 சம்பவங்களை தெரிவித்துள்ள ஆணையம், தேர்தல் நடைமுறைகளின் மீது எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ந்து புகார்களை கூறுவதை தவிர்க்கும்படியும் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், அஜய் மக்கான் உள்ளிட்ட 9 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள அந்தக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினோம். தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களை மதிக்கிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளிக்கும் பதில்கள் தாழ்ந்த தொனியில் உள்ளது.

தேர்தல் ஆணையம் தனக்கு தானே நற்சான்றிதழ் அளித்தது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால் அந்த அமைப்பு அளிக்கும் பதிலில் உள்ள தொனி மற்றும் பயன்படுத்திய மொழி மற்றும் கட்சிக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகியவை காரணமாக பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் உள்ள தொனியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். அது எங்களின் தலைவர்களை விமர்சிப்பதுபோல் உள்ளது. மோசமான தொனியில் உள்ளது. முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள். எந்த விமர்சனத்தையும் செய்யக்கூடாது. கட்சியை தாக்கக்கூடாது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற கருத்துகளை நீக்குவதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us