ADDED : ஜன 23, 2024 05:47 AM
விஜயபுரா: விஜயபுரா பசவனபாகேவாடி ஷரனசோமனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் மைபூபாஷா, 45. விவசாயி. இவரது மனைவி பிஸ்மில்லா, 38. இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். மனைவியின் நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில், பிஸ்மில்லாவை கோடரியால் வெட்டி, கணவர் கொலை செய்தார்.
இந்த சம்பவம் 2022ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி நடந்தது. அவரை பசவனபாகேவாடி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கைதான மைபூபாஷா மீது, விஜயபுரா 1வது மாவட்ட, செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுபாஷ் சங்கடா நேற்று தீர்ப்பு கூறினார். மைபூபாஷா மீதான கொலை குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகி உள்ளதாக அறிவித்த நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

