2வது திருமணம் செய்ய முயன்ற தங்கையை கொலை செய்த 2 அண்ணன்களுக்கு ஆயுள்
2வது திருமணம் செய்ய முயன்ற தங்கையை கொலை செய்த 2 அண்ணன்களுக்கு ஆயுள்
ADDED : ஜூலை 12, 2025 01:39 AM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணுார் அருகே கணவனும் குழந்தையும் இருக்கும்போது 2வதாக வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற தங்கையை வெட்டிக்கொலை செய்த இரு அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கண்ணூர் அருகே பழசி பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத். மனைவி கதீஜா 28. இரு மகள்கள் உள்ளனர். கோழிக்கோட்டை சேர்ந்த சாகுல் ஹமீதுடன் 43, கதீஜாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகி கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு ஷாகுல் ஹமீதை திருமணம் செய்ய கதீஜா தீர்மானித்தார். இதற்கு அவரது அண்ணன்கள் இஸ்மாயில் 38, பிரோஸ் 34 கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கதீஜா தன் முடிவில் உறுதியாக இருந்ததார்.
இந்நிலையில் 2012 டிச., 12- கதீஜாவுக்கும் ஷாகுல் ஹமீதுக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு அழைத்து சென்று இஸ்மாயிலும், பிரோசும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் கதீஜா இறந்தார். பலத்த காயமடைந்த சாகுல் ஹமீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இதுதொடர்பாக இஸ்மாயில் உள்ளிட்ட 2 பேரை தலச்சேரி போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் தலா ஆயுள் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பளித்தார்.