ADDED : மார் 06, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோஹிணி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியை 2021 ஜூலை 26ல் உணவுப்பொருள் ஆசை காட்டி, 31 வயதான குற்றவாளி கடத்திச் சென்றுள்ளார். பின் கத்திமுனையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுஷீல் பாலா தாகர் விசாரித்து வந்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வாலிபரை குற்றவாளி என அறிவித்தார்.
அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளித்தார். 'எந்தத் தொகையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் துன்பத்தைக் குறைக்காது' என, நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.