பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
ADDED : ஜூன் 03, 2025 08:49 PM
புதுடில்லி:நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டவை விதிக்கப்பட்டு, பரோலி சென்ற பின், தலைமறைவானவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பீஹார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷம்பு யாதவ்,38. புதுடில்லி அலிபூரில் 2016ம் வேலை செய்தார். அப்போது, தன் அறைக்கு அருகேயுள்ள வீட்டில் வசித்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷம்புவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2018ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஷம்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காலத்தில், ஷம்புவுக்கு எட்டு வார பரோல் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து 2020ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி வந்த ஷம்பு தலைமறைவானார்.
அவரைக் கைது தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், ஷம்பு குறித்து தகவல் தருவோருக்கு 5,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. போலீசிடம் சிக்காமல் இருக்க மொபைல் போன் பயன்படுத்துவதையும் தவிர்த்தார்.
பீஹார் மாநிலம் கயா பகுதியில் ஷம்பு இருப்பது குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் கயாவுக்கு சென்று ஷம்புவை கைது செய்தனர்.