ADDED : ஜன 24, 2026 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில் நேற்று பல இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதனால், நகரில் வெப்ப நிலை வெகுவாக குறைந்திருந்தது.
டில்லியில் நேற்று காலையில், பல இடங்களில், இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. டில்லி மட்டுமின்றி, டில்லியை ஒட்டியுள்ள பல பகுதிகளில் இதே நிலை காணப்பட்டது.
நகரின் வானிலையில் மேற்கு காற்றின் போக்கால், பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மணிக்கு, 30 - 40 வேகத்தில் காற்று வீசியது. மதியம் மற்றும் மாலையிலும், நகரின் பல இடங்களில் மழை பெய்தது. இதனால், பொதுவான குறைந்தபட்ச வெப்ப நிலை, வெகுவாக குறைந்திருந்தது.

