sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விடிய விடிய கொட்டிய மழை

/

விடிய விடிய கொட்டிய மழை

விடிய விடிய கொட்டிய மழை

விடிய விடிய கொட்டிய மழை


ADDED : அக் 08, 2025 12:22 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகர் டில்லியில் விடிய விடிய மழை கொட்டியது. நேற்று காலையில் சற்று வெயில் அடித்த நிலையில், மதியத்துக்குப் பின் கனமழை பெய்தது.

டில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்த வானிலை ஆய்வு மையம், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யவும், மணிக்கு -60 கி.மீ., வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலும் மழை பெய்து வருகிறது.ேற்று காலை காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சப்தர்ஜங்கில் 1.26 செ.மீ., மழை பெய்திருந்தது.

பாலம் - 0.11 செ.மீ., ரிட்ஜ் - 1.17 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு காலை 9:00 மணிக்கு 68 ஆக இருந்தது.

இது, திருப்தியான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சண்டிகரில் 4.06 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.

பஞ்சாபின் அமிர்தசரஸில் 2.06 செ.மீ., லுாதியானா - 0.96 செ.மீ., பாட்டியாலா - 0.9 செ.மீ., பதான்கோட் - 0.19 செ.மீ., பதிண்டா - 2.06 செ.மீ., பரித்கோட் - 0.35 செ.மீ., குர்தாஸ்பூர் - 1.67 செ.மீ., பெரோஸ்பூர் - 0.3 செ.மீ., மொஹாலி - 0.38 செ.மீ., மழை பெய்துள்ளது.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் 2.68 செ.மீ., ஹிசார் - 1.92 செ.மீ., கர்னால் - 1.48 செ.மீ., நர்னால் - 0.41 செ.மீ., ரோஹ்தக் - 0.10 செ.மீ, சிர்சா - 0.12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. தித்வானா-குச்சாமனில் 13.1 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. பிகானீர், சுரு, நகூர், ஜெய்ப்பூர், ஜுன்ஜுனு, கரவுலி, சவாய் மதோபூர், சிகார், தோல்பூர் மற்றும் தவுசா ஆகிய இடங்களில் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டியது.

மழை படிப்படியாக குறையும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஷேகாவதி, ஜெய்ப்பூர், பரத்பூர் மற்றும் கோட்டா இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us