sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாகச பிரியர்களுக்கு ஏற்ற லிங்கனமக்கி அணை

/

சாகச பிரியர்களுக்கு ஏற்ற லிங்கனமக்கி அணை

சாகச பிரியர்களுக்கு ஏற்ற லிங்கனமக்கி அணை

சாகச பிரியர்களுக்கு ஏற்ற லிங்கனமக்கி அணை


ADDED : ஜன 29, 2025 08:10 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா மாவட்டம், சாகரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள ஹொன்னாமரடு கிராமத்தில் அமைந்துள்ளது லிங்கனமக்கி அணை. இது சாகச பிரியர்களுக்கு சொர்க்காகும். இந்த இடம் அனைத்து வயதினருக்கும் பல்வேறு வகையான சாகச மற்றும் நீர் விளையாட்டுகளை வழங்குகிறது. அழகான சூரிய உதயம், அஸ்தமனத்தை காண ஏற்ற இடம்.

முகாம்


இது, முகாமிட்டு தங்கவும் ஏற்ற இடமாகும். சாகச பிரியர்கள் கூடாரம் அமைத்து கொள்ளலாம். கூடாரம் அருகில் நீங்களே தீ மூட்டி, எளிய உணவு சமைத்து சாப்பிடலாம். இரவு நேரத்தில் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்தபடி பேசிக் கொண்டிருக்கலாம். இரவு நேரத்தில் அணையில் நீரின் அலைகளை கேட்டபடியே இருக்கலாம்.

நீச்சல்


இங்குள்ள நீர் சுத்தமானதாகவும், அமைதியானதாகவும் இருக்கும். எப்போது சென்றாலும் நீந்தலாம். நீச்சல் தெரியாதவர்கள், உயிர் காக்கும் கவசத்தை அணித்து கொண்டு நீந்துவது நல்லது.

பரிசல்


அணையில் உள்ள சிறிய தீவுக்கு செல்ல, பரிசல் வசதியும் உள்ளது. இந்த பரிசலில் நான்கு முதல் ஆறு பேர் அமர்ந்து பயணிக்கலாம்.

கெனோயிங்


'கெனோயிங்' என்பது இருவர் மட்டுமே அமர்ந்து, அவர்களே துடுப்பு போட்டு பயணிக்கும் படகு. இதில் பயணிக்க அசாத்திய திறமை வேண்டும். இருவரும் சமநிலையில் ஒருங்கிணைப்புடன் துடுப்பு போட வேண்டும்.

ராப்டிங்


'ராப்டிங்' என்பது ஒரே ரப்பர் படகில் ஆறு முதல் ஒன்பது பேர் வரை பயணிக்க கூடிய சவாரியாகும். இங்கு வரும் நீர்வாழ் ஆர்வலர்கள், இதில் பயணிப்பதை விரும்புவர்.

கயாக்கிங்


கயாக்கிங் என்பது ஒருவர் மட்டுமே பயணிக்க கூடிய படகாகும். இந்த படகை ஓட்ட திறமை, நதியின் நெழிவு சுழிவுகளை தெரிந்திருக்க வேண்டும். இதில் பயணிப்பதால், சாகச பிரியர்கள் உற்சாகம் அடைகின்றனர்.

பாய்மர சர்பிங்


பெரிய அளவிலான பாய்மரத்தை நின்று கொண்டு பிடித்தபடி, காற்றுக்கு ஏற்ற வகையில் சவாரி செய்யும் படகாகும். இதில் பயணிப்போர் காற்று வீசும் திசையை அறிந்து, அதற்கு ஏற்றபடி சமநிலையில் இயக்க வேண்டும்.

மலையேற்றம்


ஹொன்னாமரடு மலையேற்றத்துக்கு சிறந்த இடமாகும். இயற்கை அழகை ரசித்தபடி பயணிக்கலாம். அதுபோன்று பறவைகள் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடம். பலவகையான பறவைகளை ஒரே இடத்தில் காணலாம்.

ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் இங்கு செல்வது சரியான நேரமாகும்.

30_Article_0001, 30_Article_0002, 30_Article_0003

லிங்கனமக்கி அணையில் உள்ள குட்டி குட்டி தீவுகள். (அடுத்த படம்) பரிசலில் சூப்பரான பயணம் (கடைசி படம்) கெனோயிங்கில் இருவர் மட்டுமே துடுப்பு போட்டு பயணிக்கும் படகு சவாரி.



எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.ரயிலில் செல்வோர், சாகரா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, பஸ், டாக்சியில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர், ஷிவமொக்கா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us