மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கோர்ட் காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கோர்ட் காவல் நீட்டிப்பு
ADDED : ஜன 20, 2024 08:44 PM

புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோரின் நீதிமன்ற காவல் பிப்.03-ம் தேதி வரை கோர்ட் நீட்டித்து உத்தரவிட்டது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 2022ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டதில் அரசுக்கு பெருமளவு நிதி இழப்பீடு ஏற்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து துணை நிலை கவர்னர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த முறை கேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை விசாரணை நடத்தி கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
மற்றொரு ஆம் ஆத்மி கட்சி தலைவரான சஞ்சய் சிங்கும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். சிறப்பு நீதிபதி எம்.கே. நக்பால், இருவரின் நீதிமன்ற காவலை பிப்.03-ம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.