மதுபானம் விலை அதிகரிப்பு அமைச்சர் திம்மாபுரா ஆதரவு
மதுபானம் விலை அதிகரிப்பு அமைச்சர் திம்மாபுரா ஆதரவு
ADDED : ஜன 31, 2024 07:43 AM
ராய்ச்சூர் : ''மதுபானத்தின் விலை அதிகரித்தால், நல்லதுதானே. குடிகாரர்கள் எண்ணிக்கை குறையும்,'' என, கலால்துறை அமைச்சர் திம்மாபுரா தெரிவித்தார்.
ராய்ச்சூரு, சிந்தனுாரில் 101 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 89.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம், கலால்துறை அமைச்சர் திம்மாபுரா முன்னிலையில், ஜே.சி.பி., உதவியால் அழிக்கப்பட்டது.
பின் அமைச்சர் திம்மாபுரா கூறியதாவது:
தமிழகம், ஆந்திராவுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் தரமான மதுபானம் விற்பனையாகிறது. சில மதுபான ரகங்கள், ஏற்றுமதி ஆகின்றன. வேறு இடங்களின் மதுபானம், நம் மாநிலத்துக்குள் நுழையாமல், தடுத்துள்ளோம். சட்டவிரோதமாக மதுபானம் விற்றால், கடத்தினால் வழக்குப் பதிவு செய்கிறோம்.
மதுபானம் விற்பனை அளவு குறைந்தால், யாருக்கு நஷ்டம். மதுபான விலை அதிகரித்தால் நல்லதுதானே. விலை அதிகமானால் குடிகாரர்கள் எண்ணிக்கை குறையும். மக்கள் அதிகமாக குடிக்க வேண்டுமா. மாநிலத்தில் புதிதாக மதுபான கடைகள் திறக்க, தற்போதைக்கு அனுமதி அளிக்கவில்லை.
பெலகாவியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபானமும், ராய்ச்சூர், சிந்தனுாரில் 89.60 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானமும் அழிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கூறினார்.