கெஜ்ரிவாலை பார்த்தால் மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும்: அமித்ஷா பேட்டி
கெஜ்ரிவாலை பார்த்தால் மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும்: அமித்ஷா பேட்டி
UPDATED : மே 17, 2024 01:53 PM
ADDED : மே 17, 2024 11:35 AM

புதுடில்லி: ‛‛ டில்லி முதல்வர் கெஜ்ரிவால் எங்கு பிரசாரத்திற்கு சென்றாலும், மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: பஞ்சாப் உட்பட எந்த இடத்திற்கு கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு சென்றாலும், அவரை பார்க்கும் போது மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும். மக்கள், கெஜ்ரிவாலை பார்க்கும் போது, அவர் முன்னால் பெரிய 'பாட்டில்'களையும் பார்ப்பார்கள். பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததால், ‛இண்டியா ' கூட்டணி பலன் அடையும் என நான் கருதவில்லை.
தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. மனுவை திருத்தி ஜாமின் கேட்டார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. பிரசாரம் செய்வதற்காக மட்டும் இடைக்கால ஜாமின் வழங்கியது. இது கெஜ்ரிவாலுக்கோ, ஆம் ஆத்மிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அமித்ஷா மேலும் கூறியதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது சரியே. இதற்கான சாட்சி தான் ஓட்டு சதவீதம். அங்கு வெறும் 14 சதவீதம் ஆக இருந்த ஓட்டு சதவீதம் இந்தத் தேர்தலில் 40 சதவீதமாக அதிகரிக்க இந்த நடவடிக்கையே காரணம். பிரிவினைவாத குழுக்களின் தலைவர்கள் கூட ஓட்டுப் போட்டனர்.
இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை. இப்போது நாட்டு மக்கள் காங்கிரசின் கொள்கை என்னவென்று யோசிக்க வேண்டும். யாரேனும் தென் மாநிலங்களை தனி நாடு என்று தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த லோக்சபா தேர்தலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தனிப்பெங் கட்சியாக பா.ஜ., வாகை சூடும். எனக்கூறினார்.
கடந்த வாரம் பிஆர்எஸ் தலைவர் ராமாராவ் அளித்த பேட்டியில் வட இந்தியா என்பது முற்றிலும் வேறொரு தேசம். அது ஒரு தனி உலகம் எனக்கூறியிருந்தார். அதற்கு தான் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

