ADDED : அக் 30, 2025 10:41 PM

பாலக்காடு:  பாலக்காடு அருகே, எரிசாராயம் பறிமுதல் செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், மீனாட்சிபுரம் போலீசார், கடந்த 27ம் தேதி பொள்ளாச்சி எல்லையில், கம்பாலத்தறை அணை அருகே உள்ள வீட்டில் நடத்திய சோதனையில், 1,260 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, வீட்டு உரிமையாளர் கண்ணையன்,56, என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தென்னந்தோப்பு உரிமையாளரான கண்ணையன், கள்ளில் கலப்பதற்காக எரிசாராயத்தை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
அவருக்கு தமிழகத்திலிருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து வழங்கிய காயம்குளம் கார்த்திகபள்ளி பகுதியைச் சேர்ந்த மனோஜ், நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த விகாஸ், கன்னியாகுமாரி செறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வாசவ் சந்திரன், ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கன்னிமாரி மூலத்தறை பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ், 51, மற்றும் உதயகுமார், 46, ஆகியோரை, சித்தூர் டி.எஸ்.பி., அப்துல் முனீர் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீனாட்சிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு சரணடைந்தனர். இவ்வழக்கில் இத்துடன், ஆறு பேர் கைதாகி உள்ளனர்.

