அரசு பணத்தில் அமைச்சர்களின் மருத்துவச் செலவு பட்டியல்; முதல்வர் தான் டாப்!!
அரசு பணத்தில் அமைச்சர்களின் மருத்துவச் செலவு பட்டியல்; முதல்வர் தான் டாப்!!
UPDATED : நவ 27, 2024 05:21 PM
ADDED : நவ 27, 2024 05:07 PM

திருவனந்தபுரம்: அமைச்சர்களின் மருத்துவ செலவு பட்டியல் வெளியான நிலையில, முதல்வர் பினராயி விஜயனுக்கு தான், கேரள அரசு அதிகம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் செய்த மருத்துவச் செலவு குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி முதல் 2024ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி வரையில் ஒட்டுமொத்தமாக ரூ.1.73 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கும் எந்த சிறப்பு இன்சூரன்ஸூம் போடவில்லை என்றும், செய்யப்பட்டுள்ள அனைத்து மருத்துவ செலவுகளுக்கான பணமும் நிதித்துறையில் இருந்தே செலுத்தப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூ.77 லட்சத்து 74 ஆயிரத்து 356 செலவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷனுக்கு ரூ.1,42,123ம், முன்னாள் அமைச்சர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தனுக்கு ரூ.2,22,256 செலவிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் மருத்துவ செலவு விபரம்
கே கிருஷ்ணன்குட்டி - ரூ.32,42,742
வி.சிவன்குட்டி - ரூ.18,95,758
ஏ.கே. சசீந்திரன் - ரூ.5,94,458
அந்தோணி ராஜூ (முன்னாள் அமைச்சர்) - ரூ.6,41,071
ஆர்.பிந்து - ரூ.4,28,166
அஹமது தேவர்கோவில் (முன்னாள் அமைச்சர்) - ரூ.4,20,561
வி.என்.வாசவன் - ரூ.3,46,929
கடனப்பள்ளி ராமச்சந்திரன் - ரூ.3,15,637
எம்.பி. ராஜேஷ் - ரூ.3,39,179
வி.அப்துல் ரஹிம் - ரூ.2,87,920
கே.என்.பாலாகோபால் - ரூ.2,05,950
கே.ராஜன் - ரூ.1,71,671
ஜி.ஆர்.அனில் - ரூ.1,22,000
கே.ராதாகிருஷ்ணன் - ரூ.99,219
ஜே.சிஞ்சுராணி - ரூ.86,207
சஜி செரியன் ரூ.25,424
முகமது ரியாஸ் - ரூ.18,135
என். ஜெயராஜ் ( தலைமை கொறடா) - ரூ.16,100