யாத்திரை மூலம் மக்களின் துயரங்களை கேட்கிறேன்: ராகுல்
யாத்திரை மூலம் மக்களின் துயரங்களை கேட்கிறேன்: ராகுல்
ADDED : ஜன 20, 2024 05:48 PM

இடாநகர்: ‛‛ இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் மூலம் மக்களின் துயரங்களைக் கேட்கிறேன்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரையிலான, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை காங்., - எம்.பி., ராகுல் கடந்த 14ல் துவங்கினார். இந்த யாத்திரை அருணாச்சல பிரதேசத்தில் நுழைந்துள்ளது.
அங்கு ராகுல் பேசுகையில் மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் பாஜ மக்களிடையே சண்டையை ஏற்படுத்துகிறது. சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜ வேலை செய்கிறது. அவர்கள் மக்களின் நலனுக்காக செயல்படவில்லை. காங்கிரஸ் மக்கள் நலனுக்காவும், ஒற்றுமைக்காவும் உழைக்கிறது.
நாட்டில் மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி உள்ளது. மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. இந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் மூலம் மக்களின் துயரங்களைக் கேட்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.