ADDED : செப் 25, 2024 09:16 PM

மாண்டியா: தெரிந்தவர்கள், அக்கம், பக்கத்தினர் பெயரில் பல இடங்களில் கடன் வாங்கி, இரவோடு, இரவாக தப்பிய தாய், மகளை போலீசார் தேடுகின்றனர்.
மாண்டியாவின், ஹொசஹள்ளி லே - அவுட்டின், ஐந்தாவது கிராசில் வசிப்பவர் கிரிஜம்மா, 50.
இவரது மகள் திவ்யா, 25. இவர்கள் தங்களுக்கு அறிமுகம் உள்ளவர்கள், அக்கம், பக்கத்தினரின் நம்பிக்கைக்குரிய வகையில் நடந்து கொண்டனர்.
இவர்களின் பெயரில் பல்வேறு ஸ்த்ரீ சக்தி குழுக்கள், சுய உதவி சங்கங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், கோடிக்கணக்கான ரூபாயை, தாயும், மகளும் கடன் வாங்கினர்.
இவற்றைத் திருப்பிச் செலுத்தாமல், பணத்தை சுருட்டிக் கொண்டு இரவோடு, இரவாக தப்பியோடினார்.
கடன் கொடுத்தவர்கள், வீடு தேடி வந்தபோது தான் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
அக்கம், பக்கத்தினர், தெரிந்தவர்கள் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் தாய், மகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மோசடி தாய், மகளின் பிளக்ஸ் பேனர் வைத்து, அவர்களை பற்றிய தகவல் தெரிவிக்கும்படி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

