ADDED : பிப் 17, 2024 04:49 AM
கால்நடை
l 'அம்ருத ஸ்வாபிமானி' திட்டம் எனும் கால்நடை வளர்ப்போருக்கான திட்டம் நடப்பாண்டும் நீடிக்கும். 10,000 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
l அம்ருத மஹால், ஹள்ளிகார், கிலாரி இன பசுக்களின் இன பெருக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
l பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில், பசு, எருமை வாங்க பெண் விவசாயிகள் பெற்றுள்ள கடனை, சரியான நேரத்தில் அடைத்து விட்டால், மாநில அரசே 6 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்கும்
l பன்றி, கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்
கால்நடை மருத்துவமனைகள்
l மாவட்டத்தில் உள்ள சிறப்பு கால்நடை மருத்துவமனைகள், தாலுகா அளவிலும் அமைக்கப்படும். முதற்கட்டமாக முக்கியமான 20 தாலுகாக்களில், கால்நடை மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
l வாடகை கட்டடம், சிதிலமடைந்த கட்டடங்களில் செயல்படும், 200 கால்நடை மருத்துவமனைகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்
l மாநிலத்தில் ஆடு, மாடுகளை மேய்க்க புலம் பெயரும் மக்களின் நலனுக்காக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக புலம் பெயர்ந்த ஆடு மேய்ப்போர் மற்றும் அவர்களின் சொத்துகள் மீதான அடக்கு முறை தடுப்பு சட்டம் செயல்படுத்தப்படும்
l கால்நடை மேய்ப்பவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, அவர்களின் ஆடு, மாடுகளுக்கு அரசு டாக்டர்கள் தடுப்பூசி போடுவர்
அடையாள அட்டை
l ஒரு இடத்தில் இருந்து, வேறு இடத்துக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோருக்கு, அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
l கால்நடை மேய்ப்பவர்களின் பிள்ளைகளுக்கு, உறைவிட பள்ளிகளில் இடம் அளிப்பதுடன், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
l புத்துார் கால்நடை மருத்துவ கல்லுாரி கட்டும் பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. நடப்பாண்டு கல்லுாரி செயல்பட துவங்கும்.