ADDED : நவ 11, 2025 03:04 AM

திருவனந்தபுரம்: 'கேரளாவில் உள்ளாட்சி தேர்தல், டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்' என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனர் ஏ.ஷாஜகான் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் மொத்தம் உள்ள, 1,200 உள்ளாட்சி அமைப்புகளில், மட்டனுார் நகராட்சியை தவிர 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் டிச., 9 மற்றும் 11ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
இதில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிச., 9ம் தேதியும், திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணுார், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு, காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும். ஓட்டுகள் டிச., 13ல் எண்ணப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

