ADDED : ஜன 20, 2024 06:05 AM
தங்கவயல்: தங்கவயல் நீதிமன்றத்தில் மார்ச் 9ம் தேதி லோக் அதாலத் நடைபெற உள்ளது.
தங்கவயல் நீதிமன்றத்தில் இதுகுறித்து நேற்று மூன்றாவது மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி கணபதி குருசித்த பாதாமி கூறியதாவது:
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்க, விரைந்து முடிக்க, தேசிய லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்படுகிறது. பெஸ்காம் மின் கட்டணம், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு எதிரான வழக்குகள், மாநில வரி விதிப்பு விவகாரம் என பல்வேறு வழக்குகள், சில குடும்ப நல பிரச்னை வழக்குகள் உள்ளன.
இவை தொடர்பாக இரு தரப்பிலும் வரவழைத்து சுமுகமான முறையில் தீர்வு காணப்படும்.வரும் மார்ச் 9ல் நடக்கும் லோக் அதாலத்தில் பங்கேற்று வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதிகள், மஞ்சுநாத் முஜாப்பர் மஞ்சரி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.