5 கோடி பணம், 106 கிலோ நகை: கர்நாடக போலீஸ் வலையில் சிக்கின!
5 கோடி பணம், 106 கிலோ நகை: கர்நாடக போலீஸ் வலையில் சிக்கின!
ADDED : ஏப் 08, 2024 10:44 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சோதனையில் ஈடுபட்ட கர்நாடக போலீசார், ரூ 5.60 கோடி மதிப்பிலான ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 68 வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் பெல்லாரி நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் ஈடுபட்ட கர்நாடக போலீசார், ரூ 5.60 கோடி மதிப்பிலான ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 68 வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ₹ 7.60 கோடி ஆகும்.
நகைக்கடை உரிமையாளரான நரேஷின் வீட்டில் இருந்து அதிக பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் கிடைத்த தகவல்கள், வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

