UPDATED : ஏப் 10, 2024 02:41 PM
ADDED : ஏப் 10, 2024 02:39 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம். ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரசும், இன்னொரு பக்கம் மக்களைப் பிரிக்க முயல்பவர்களும் இருக்கிறார்கள்.
நாட்டை பிளவுபடுத்துபவர்களின் பக்கம் நின்றவர்கள் யார்? நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் நிற்பவர்களுடன் கைகோர்த்தது யார்? . வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றவர் யார்?.
பிளவுபடுத்தும் சக்தி
இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுடன் மாநிலங்களில் ஆட்சியை நடத்துவது யார்? என்பது நமக்கு தெரியும். அரசியலுக்காக பொய்களை அள்ளி வீசுவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

