ADDED : ஜன 08, 2024 11:42 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., இணைந்துள்ளதால், இரு கட்சியினருக்கும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவும், தேர்தல் முன்னேற்பாடுகள், சீட் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த, நேற்று ம.ஜ.த., கூட்டம் நடந்தது.
பெங்களூரின், சேஷாத்ரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில், மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
எங்கெங்கு ம.ஜ.த., செல்வாக்கு உள்ளதோ, அங்கு கட்சி வேட்பாளரை களமிறக்குவது, மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பது, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குமாரசாமி கூறுகையில், “லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 28 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும். தேர்தலுக்கு தயாராவது குறித்து, தலைவர்களின் கருத்துகள், ஆலோசனை கேட்கப்பட்டது,” என்றார்.