தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி

இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி

இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி


ADDED : மார் 16, 2024 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-புதுடில்லி,நடப்பு, 17வது லோக்சபாவின் பதவிக்காலம் வரும் ஜூனில் முடிவடைகிறது. அதேபோல, ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலமும் ஜூனில் முடிவடைகிறது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட பதிவில், 'லோக்சபா மற்றும் சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, இன்று பிற்பகல், 3:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு, டில்லி விக்யான் பவனில் நடக்க உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமாரும், சுக்பிர் சிங் சந்துவும் நேற்று பதவி ஏற்ற நிலையில், லோக்சபா தேர்தலுக்கான தேதி இன்று வெளியாக உள்ளது.

கடந்த, 2019ல் லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, மார்ச் 10ம் தேதி வெளியானது. இந்த தேர்தல், ஏப்ரல், 11ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடந்தது. தேர்தல் முடிவுகள், 2019 மே 23ல் வெளியாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us