‛‛என்னை சிறையில் அடைத்தாலும் மீண்டு வருவேன்'': மம்தா தன்னம்பிக்கை
‛‛என்னை சிறையில் அடைத்தாலும் மீண்டு வருவேன்'': மம்தா தன்னம்பிக்கை
ADDED : பிப் 01, 2024 04:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: ‛‛கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜி கூறியுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன்.
லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தபோதிலும் எங்களது கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்து விட்டனர். அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை. தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் உறவு வைத்துள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் உறவை முறித்து கொள்ளாமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது. இவ்வாறு மம்தா கூறினார்.