முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி
UPDATED : மார் 08, 2024 08:22 PM
ADDED : மார் 08, 2024 07:36 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்., கட்சி மேலிடம் 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் வயநாட்டில் மீண்டும் ராகுல் களம் இறங்குகிறார்.
லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இவர்தான் போட்டியிட போகிறார் என உறுதியாக முடிவாகிவிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை, முன்கூட்டியே அறிவித்தால் என்ன என்ற சிந்தனை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்துள்ளது.
அதன்படி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதன்படி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என செய்திகள் வெளியாயின. வேடபாளர்கள் பட்டியலை காங்., தலைவர்களான கே.சி வேணுகோபால், அஜய் மக்கான் ஆகியோர் வெளியிட்டனர்.
காங்கிரசும் இதே பாணியில் வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவிக்கத் தயாராகி விட்டது. இதன்படி 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 24 தொகுதிகள் எஸ்சி.. எஸ்.டி. பிரிவினருக்கும் ஒ.பி.சி.க்கும் , 15 பொது தொகுதிகளுக்கும் என 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
![]() |
1) ராகுல் - கேரள மாநிலம் வயநாடு
2) டி.கே.சுரேஷ் ( கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர்) - பெங்களூருபுறநகர்.
3) பூபேஷ் பாகல்: ராஜ்நந்தகான் ( சத்தீஸ்கர் மாநிலம்).
4) சசிதரூர்- திருவனந்தபுரம்
5) கே.சி. வேணுகோபால்: ஆலப்புழா.
6) கே. முரளீதரன் -திருச்சூர்
7) கேரள மாநில காங்., தலைவர் சுதாகரன்: கண்ணூர் தொகுதி.
8) கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா சிவராஜ்குமார் சிவமொக்கா தொகுதியில் போட்டி
சத்தீஷ்கர்- 6, கேரளா-15 , கர்நாடகா-8 , தெலுங்கானா-5, மேகாலயா -2, நாகாலாந்து, சிக்கிம்,திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒரு வேட்பாளர் என 39 வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு காங்., பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியது, காங். ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்றார்.
காங்., vs பா.ஜ., :அண்ணன் தங்கை யுத்தம்
கேரளா, திருச்சூர் தொகுதி வேட்பாளராக, முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளீதரனைக் களமிறக்கியுள்ளது காங்., திருச்சூரில் பா.ஜ., சார்பில் சுரேஷ் கோபி களம் காண்கிறார். கருணாகரனின் மகள் பத்மஜா, இரு நாட்களுக்கு முன்பு பா.ஜ.,வில் இணைந்துள்ளார். நேரடியாக இல்லாவிட்டாலும் அண்ணன் தங்கைக்கு இடையே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


