ADDED : மார் 15, 2024 07:08 AM

லோக்சபா தேர்தல் தேதிகளுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் மற்றும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ளன.
இதற்கான ஆயத்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து, தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு தேர்வு செய்துள்ள இரு புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு அரசாணையில் நேற்று வெளியானது.
இதை தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அல்லது நாளை  வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

